இந்த ஆண்டில் எனக்கு மிகவும் முக்கியமானது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியாகும் - நீரஜ் சோப்ரா


இந்த ஆண்டில் எனக்கு மிகவும் முக்கியமானது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியாகும் - நீரஜ் சோப்ரா
x

டைமண்ட் லீக் போட்டி தொடரில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்

தோகா,

டைமண்ட் லீக் தடகள போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர். விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கத்தை வென்றார். செக்குடியரசு வீரர் ஜாகுப் வாட்லிச் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அரியானாவை சேர்ந்த 26 வயதான் நீரஜ் சோப்ரா 2 சென்டி மீட்டர் வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை தவற விட்டார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

பதக்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ரா கூறுகையில், 'இந்த ஆண்டில் எனக்கு மிகவும் முக்கியமானது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியாகும். அதேநேரத்தில் டைமண்ட் லீக் போட்டியும் முக்கியமானதாகும். இந்த சீசனில் எனது முதல் போட்டி இதுவாகும். 2 சென்டி மீட்டர் வித்தியாசத்தில் பின்தங்கி 2-வது இடம் பிடித்துள்ளேன். அடுத்த முறை அதிக தூரம் வீசி முதலிடம் பெற முயற்சிப்பேன்' என்றார்.

1 More update

Next Story