கைப்பந்து லீக்; டெல்லி அணியிடம் சென்னை தோல்வி


கைப்பந்து லீக்; டெல்லி அணியிடம் சென்னை தோல்வி
x

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டூபான்ஸ் அணி 15-9, 15-13, 12-15, 19-17 என்ற செட் கணக்கில் சென்னை பிளிட்சை வீழ்த்தியது.

5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சென்னை அணிக்கு 2-வது தோல்வியாகும். இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ் - கோழிக்கோடு ஹீரோஸ் (மாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story