வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 507 ரன்கள் குவித்து டிக்ளேர்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 507 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பிரிட்ஜ்டவுன்,
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது,
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்ர் லீஸ் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜாக் கிராலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 153 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ் 91 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
5 ஆம் பேட்ஸ்மேனாக களமிறக்கிய பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 128 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 120 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் அவர் பிராத்வெயிட் பந்துவீச்சில் 120 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.
Related Tags :
Next Story