முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு 314 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா


முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு 314 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 29 March 2022 7:20 PM IST (Updated: 29 March 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.

லாகூர்,

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்றுவரும் முதல் ஒருநாள்  போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. 

அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கேப்டன் ஆரோன் பின்சும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். பின்ச் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹெட் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 101 ரன்களில் அவுட்டானார். பென் மெக்டர்மோட் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கேமரூன் கிரீன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.  இதையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 


Next Story