ஜீத்து ஜோசப்பின் "மிராஜ்" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீத்து ஜோசப் இயக்கிய மிராஜ் படத்தில் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்துள்ளனர்.;
மலையான சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். இவர் 2010-ம் ஆண்டு 'மம்மி & மீ' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் மோகன்லாலை வைத்து 'நேரு' என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தபோது இயக்குனர் ஜீத்து ஜோசப் 'மிராஜ்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர். 'கூமன்' படத்தின் வெற்றி பிறகு, இப்படத்தில் ஜீத்து ஜோசப் மற்றும் ஆசிப் அலியின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி.
இப்படத்திற்கு விஷ்ணு ஷ்யாம் இசையமைத்துள்ளார். மிராஜ் படத்தின் திரைக்கதையை ஜீத்து ஜோசப் ஸ்ரீநிவாஸ் அப்ரோல் உடன் இணைந்து எழுதியுள்ளார். ஈ4 எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 19 ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.