நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்
மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
பத்தனம்திட்டா (கேரளா),
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கலஞ்சூர் கிராமத்தில் தனது மனைவியையும், அவரது ஆண நண்பரையும் வெட்டிக் கொன்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணவி (27) மற்றும் விஷ்ணு (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "வைஷ்ணவியின் கணவர் பைஜு (32), தனது மனைவிக்கும் விஷ்ணுவுக்கும் இடையேயான தகாத உறவு இருப்பதாக சந்தேகித்து இருக்கிறார். இந்த சூழலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் வைஷ்ணவியை களஞ்சூரில் உள்ள விஷ்ணுவின் வீட்டிற்கு துரத்திச் சென்று, கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக வீட்டுத் தகராறில் வைஷ்ணவி தனது வீட்டை விட்டு ஓடி விஷ்ணுவின் வீட்டில் தஞ்சம் புகுந்ததாகக் கூறப்படுகிறது. வைஷ்ணவியைத் தாக்கிய பிறகு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது விஷ்ணுவையும் பைஜு வெட்டிக் கொன்றார். இதனையடுத்து போலீசார் பைஜுவை கைது செய்தனர்" என்று தெரிவித்தனர்.