பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 80 இந்திய விமானங்கள் ஈடுபட்டன. அதில் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
மராட்டியத்தில் உள்ள மும்பையில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
பஹல்காம் தாக்குதல் வழக்கு: அவசர கோரிக்கை விடுத்த என்.ஐ.ஏ
பஹல்காம் தாக்குதல் தொடர்பான படங்கள், வீடியோக்கள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம். பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலின்போது இருந்த பயணிகள் உள்ளிட்ட எவரும் ஆதாரம் இருப்பின் தரலாம் என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
போர்க்கால ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில் இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் இன்றிரவு 8 மணி முதல் 8.15 வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சூழலின்போது செயல்படுவது குறித்து டெல்லி மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஏற்கனவே மாலை 4 மணியளவில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒத்திகைகள் நடந்தன.
பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் விமானப்படை இருப்பதாக பாதுகாப்புத் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில், ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு திரளாக சென்ற இளைஞர்கள் பலர் இன்று ரத்த தானம் அளித்தனர்.
இதற்காக அவர்கள், நீண்ட வரிசையில் நின்றனர். இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் குப்தா கூறும்போது, ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால், அதற்கு ரத்த தானம் அளிக்க தயாராக நாங்கள் இருக்கிறோம் என்றார். அவரும் இந்த ரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதற்காக இளைஞர்கள் பலரும் முன்வந்து நாட்டுக்கு பங்காற்ற வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழலில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் முன்னிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பிரவீன் சூட்டின் பதவிக்கால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை அந்த குழுவின் செயலாளர் மணீஷா சக்சேனா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் ஆகிய 2 பகுதிகளில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை ராணுவம் தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை தொடங்கப்பட்டு உள்ளது.
இதன்படி மின் விளக்குகளை அணைத்தும், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியும் ஒத்திகை பார்க்கப்படும். இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.