விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - டாடா குழும தலைவர் அறிவிப்பு

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.;

Update:2025-06-12 20:39 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.

இதுவரை வெளியான தகவலின்படி, இந்த கோர விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ள நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை செயலாளர் தனஞ்செய் திவேதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் டாடா நிறுவனம் ஏற்கும் என்றும், விமான விபத்தில் சேதமடைந்த மருத்துவ கல்லூரி விடுதியை சீரமைக்க டாடா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்