இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

Update:2025-04-12 09:22 IST
Live Updates - Page 2
2025-04-12 11:29 GMT

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்ய தவறினால், அது குற்றம்.

அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கைது, அபராதம், சிறை தண்டனை அல்லது நாடு கடத்தப்படுதல் ஆகிய தண்டனைகளை சந்திக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அவர்கள் ஒருபோதும் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2025-04-12 11:01 GMT

நாடு முழுவதும் யுபிஐ சேவை இன்று பாதிக்கப்பட்டது. காலை 11 மணி முதல் யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பயனாளர்கள் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பயனாளர்கள் அவதியடைந்தனர். இந்த முடக்கம், உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, மின் கட்டணம் செலுத்துவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்புவது போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு யுபிஐ செயலியை நம்பியிருக்கும் மக்களை வெகுவாக பாதித்தது.

2025-04-12 10:44 GMT

திருவண்ணாமலையில் பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நாளான இன்று கிரிவலம் செல்ல அதிகாலை 4.15 மணிக்கு (இன்று 12ம் தேதி) தொடங்கி நாளை அதிகாலை 6.08 மணிவரை உகந்த நேரம் என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், பவுர்ணமி நாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை தொடங்கி, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி, திருவண்ணாமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2025-04-12 09:54 GMT

சர்ச்சை பேச்சுக்கு பொன்முடி மன்னிப்பு கேட்டார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி பேசியதற்காக மன்னிப்பு கோருகிறேன். அனைவரின் மனம் புண்படும்படி பேசியதற்காக மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என அவர் தெரிவித்து கொண்டார்.

2025-04-12 09:42 GMT

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். கரோல் பாக் நகரில் உள்ள சித் அனுமன் கோவிலில் இன்று சாமி தரிசனமும் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், அனைத்து டெல்லிவாசிகளுக்கும் நான் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன்.

ரொட்டி அல்லது எந்தவொரு உணவையோ சாலையில் தூக்கி எறியாதீர்கள். விலங்குகளுக்கு அன்புடன் உணவு வழங்குங்கள். ஆனால் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய கலாசாரம் மீது மதிப்பு வைத்திடுங்கள். உங்கள் சாலைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள் என பதிவிட்டு உள்ளார்.

2025-04-12 09:33 GMT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

2025-04-12 09:26 GMT

கேரள மாநிலம் பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே இன்று சென்னை - பாலக்காடு ரெயில் சென்றது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில மாடுகள் தண்டவாளத்தில் நடந்து சென்று கடந்து செல்ல முயன்றது.

அப்போது, ரெயில் ஒன்று விரைவாக வந்து, அந்த மாடுகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில், 13 கால்நடைகள் உயிரிழந்தன. இதன்பின்னர் மீட்பு படையினர் அவற்றின் உடல்களை அகற்றினர். போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

2025-04-12 07:01 GMT

வரும் 2026-சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையேதான் போட்டி என்று விஜய் தெரிவித்துள்ளார். பாஜக- அதிமுக கூட்டணியையும் கடுமையாக விமர்சித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்