இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

Update:2025-05-08 07:06 IST
Live Updates - Page 2
2025-05-08 09:30 GMT

இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது.

காஷ்மீர், பஞ்சாப், ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது.

2025-05-08 08:58 GMT

எல்லை பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டால், மீண்டும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை அதிகரித்து உள்ள சூழலில், மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் எச்சரிக்கை விட்டுள்ளார்.

2025-05-08 08:20 GMT

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராஜ்நாத் சிங்


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக ராஜ்நாத்சிங் கூறினார். மேலும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

2025-05-08 08:17 GMT

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்


தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்ததாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தாலும், சட்டசபை இருக்கை வரிசையில் அவருக்கு 10-வது இடம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்களுக்கு இடைப்பட்ட 8 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக, 2-வது இடத்தில் அமைச்சர் துரைமுருகன் இருந்து வருகிறார். நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறையை கவனித்து வந்த இவர், தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராகவும் இருந்து வருகிறார்.


2025-05-08 08:13 GMT

அதிகரிக்கும் பதற்றம்.. எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை


பஞ்சாப்பின் பெரோஸ்பூர் பகுதியில் எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


2025-05-08 07:34 GMT

ராஜஸ்தான் - பாக்., எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்.. சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட உத்தரவு


ராஜஸ்தான், பாகிஸ்தானுடனான தனது எல்லையை முழுமையாக மூடி உள்ளது. இந்நிலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (BSF) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


2025-05-08 07:32 GMT

சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து


இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் காரணமாக வான் மண்டல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து செல்லும் 5 விமானங்களும் சென்னைக்கு வரும் 5 விமானங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.


2025-05-08 07:29 GMT

போர் பதற்றம்: பஞ்சாப், ராஜஸ்தானில் பள்ளிகள் மூடல்.. போலீசார் விடுமுறை ரத்து


எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரு மாநிலங்களிலும், போலீசாரின் விடுமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது.


2025-05-08 07:28 GMT

பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா


ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக பஞ்சாப்பில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.


2025-05-08 07:04 GMT

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்: ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துரைமுருகன் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்