இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025

Update:2025-06-20 09:54 IST
Live Updates - Page 2
2025-06-20 09:19 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாகவும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் முதல்-அமைச்ச தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.

2025-06-20 09:17 GMT

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது

வடகிழக்கு ஜார்கண்ட் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

2025-06-20 09:14 GMT

ஜனாதிபதிக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

நல்ல ஆரோக்கியத்துடன் கருணை, கண்ணியம், அர்ப்பணிப்போடு நாட்டை வழிநடத்த வாழ்த்துகள் மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2025-06-20 09:11 GMT

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் நாளை திறப்பு

சென்னையில் ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை நாளை மாலை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2025-06-20 08:21 GMT

முதியோர் இல்லத்தில் 5 பேர் பலி - அதிர்ச்சி தகவல்

  • தென்காசி சுந்தர பாண்டியபுரத்தில் முதியோர் இல்லத்தில் மாமிச உணவு அருந்திய 5 பேர் பலியான சம்பவம்
  • காப்பகத்தில் உள்ளவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் மற்றும் குடிநீர் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்
  • ஆய்வின் முடிவில் குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று அதிகமாக ஏற்படும் - தொற்றின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு
  • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரிய வரும்

2025-06-20 07:07 GMT

மதுரை - குற்றாலம் இடையேயான அரசு பேருந்து, தென்காசி- கடையநல்லூர் அருகே இடைகால் என்ற பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால், பேருந்து தரையில் மோதியது. பின்னிருக்கையில் அமர்ந்து இருந்த மூன்று மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2025-06-20 06:32 GMT

4 புதிய கல்லூரிகளை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

2025-06-20 06:00 GMT

  • கடற்படை விமானம் மீது லேசர் லைட் - பரபரப்பு
  • கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் 228 விமானம் கடலோரத்தில் ரோந்து பணியை முடித்து விட்டு பரங்கி மலை விமான தளத்திற்கு வந்தது
  • சென்னையில் தரையிறங்க தாழ்வாக பறந்த போது லேசர் லைட் விமானத்தை நோக்கி அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி
  • கடலோர கடற்படை சார்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர்

2025-06-20 05:59 GMT

  • டாஸ்மாக் வழக்கு - ED நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை
  • ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
  • அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
  • வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம்

2025-06-20 05:30 GMT

கிருஷ்ணகிரி அண்ணாசிலை எதிரே அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. ‘மா’ மரங்களுக்கு இழப்பீடு தரக்கோரி கேபி முனுசாமி தலைமையில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மாம்பழம் விலை குறைப்பை எதிர்த்தும், கூழ் வரியை 5 சதவீதம் ஆக குறைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்