ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையோடு ஜனவரி 6-ந்தேதி தொடங்க இருப்பதாக பேரவை தலைவர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே எடப்பாடியார் பேசும்போது, நேரலை துண்டிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.
மக்கள் பிரச்சனையை பேசுகின்ற சட்டமன்றத்தில், மக்களுக்கு தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது தான் சட்டமன்றம். ஆனால் அங்கே என்ன நடைபெறுகிறது? எதிர்க்கட்சியினுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது.
கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால்தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும். வருகிற ஜனவரி 6-ந்தேதி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அந்த கூட்டத்தொடரில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடியே ஆண்டுக்கு100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
7-வது முறையாக ஆட்சி அமைப்பதே நமது இலக்கு என திமுக செயற்குழுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சமூக வலைதளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும். திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது - திமுக செயற்குழுக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனம் அமைக்கும் கார் உற்பத்தி ஆலைக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. இதன்மூலம் 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற்சாலை அமைய உள்ளது.
தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும், இணையதள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை என்றுஅமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
அம்பேத்கர் குறித்தான அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து தூத்துக்குடி விமான நிலையத்தை முற்றுகையிட்டு விசிகவினர் போராட்டம் நடத்தினர்.
அனைத்து நீதிமன்றங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பிஸ்டல், நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை காவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
திமுக பாடவிருக்கும் போர்ப்பரணியை கேட்க ஆவலாக இருக்கிறேன் என சீமான் திருச்சியில் கூறினார்.
மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி மேலூர் அருகே சின்னக்கற்பூரம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.