தூத்துக்குடியில் 2.7 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி, சத்யாநகர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் பைக்குகளில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.;

Update:2025-06-25 01:12 IST

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட எஸ்.பி.யின் தனிப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் ஆகியோர் நேற்று (24.6.2025) தூத்துக்குடி, சத்யாநகர் அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் பைக்குகளில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வசமுத்து மகன் அருண்சுனைமுத்து (வயது 22), கால்டுவெல் காலனியைச் சேர்ந்த பாலா மகன் ராஜ்குமார்(29), டிஎம்பி காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரி(எ) மாரிலிங்கம்(24), ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தனசேகர் மகன் சன்னத்பெருமாள்(27) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்சொன்ன போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்