7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

திருநெல்வேலியில் மானூர், கங்கைகொண்டான் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-06-12 08:40 IST

திருநெல்வேலி மாவட்டம், மானூர், நடுபிள்ளையார்குளம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சஜுவ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நான்கு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நடுபிள்ளையார்குளம், வடக்கு தெருவை சேர்ந்த மகாராஜன் (வயது 31) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், மகாராஜனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ 216 கிராம் புகையிலை பொருட்களையும் ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

இதேபோல், கங்கைகொண்டான், துறையூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ராஜபதி, கிழக்கு தெருவை சேர்ந்த மாசானம்(40) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், மாசானத்தை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்