நெல்லையில் போலீசாரின் குழந்தைகளுக்கு துணை கமிஷனர் புத்தகங்கள் வழங்கி அறிவுரை
நெல்லை மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று மாநகர காவல் துணை கமிஷனர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.;
நெல்லை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. அதில் நெல்லை மாநகர காவல் துணை கமிஷனர் (தலைமையிடம்) விஜயகுமார் கலந்து கொண்டதோடு, மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். மேலும் அவர் மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கு (6 முதல் 12ம் வகுப்பு வரை) தமிழ் மற்றும் ஆங்கில மொழி வழிகாட்டு புத்தகங்களை வழங்கி அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல் உதவி கமிஷனர், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.