நெல்லையில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தியாகராஜநகரில் உள்ள பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.;

Update:2025-10-01 21:48 IST

நெல்லையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் பெருமாள்புரம் உழவர்சந்தை பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தியாகராஜநகரில் உள்ள பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலையில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்