கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.;

Update:2025-10-28 08:46 IST

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜீவா (வயது 18), தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி வந்த 2 பேர், ஜீவாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச்சென்றனர். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்