நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.;
நெல்லை,
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா வருடம்தோறும் ஆனி மாதம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 8-ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக, ஜூலை 19-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.