'பார்'களில் ஆபாச உடை அணிந்து பெண்கள் மது வினியோகம் - போலீசார் நோட்டீஸ்

போலீசார் சோதனையின்போது மதுபான விடுதிகள் நள்ளிரவு 1 மணிக்கு மேலும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.;

Update:2025-06-21 02:15 IST

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய, மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், இளம்பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து மதுபானம் வினியோகிப்பது மற்றும் நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து, உப்பார் பேட்டை, சிக்பேட்டை, கப்பன் பார்க், எஸ்.ஜே.பார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 19 மதுபான விடுதிகளில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று அதிகாலை வரை நீடித்தது.

சோதனையின்போது மதுபான விடுதிகள் நள்ளிரவு 1 மணிக்கு மேலும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. 1 மணிக்கு மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஆபாச உடை அணிந்த இளம்பெண்கள் மதுபானம் மற்றும் உணவுகளை வழங்கிய வண்ணம் இருந்தார்கள்.

அத்துடன் ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள விதிமுறைகளை மதுபான விடுதிகளும், ரெஸ்டாரண்டுகளும் மீறி இருந்ததும் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விதிமுறைகளை மீறிய 19 மதுபான விடுதிகள் மீதும் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

மேலும் அந்த மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி போலீசார் நோட்டீசும் அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்