தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.303 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல்
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.;
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய, அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை கருத்தில் வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில், பத்திரங்கள் பதிவு செய்ய, நேற்று முன்தினம் (டிசம்பர் 1ம் தேதி) கூடுதல் 'டோக்கன்'கள் வழங்க அனுமதிக்கப்பட்டது.
இதை பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகின. இதனால் முதல் முறையாக பதிவுத்துறைக்கு, நேற்று முன்தினம் ஒரே நாளில் 302.73 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.