தூத்துக்குடி: தனியார் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.;
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளருக்கு ரூ.725, ஒப்பந்த ஓட்டுநர், வால்வு ஆப்பரேட்டர்களுக்கும் ரூ.763 வழங்க வேண்டும், தனியார் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும், கொரோனா சிறப்பு அலவன்ஸ் ரூ.15,000 வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் தூத்துக்குடி மாநகராட்சி கிளை சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், துறைமுக சபை முன்னாள் உறுப்பினர் ரசல், சிபிஎம் நகர செயலாளர் முத்து, சிஏடி சார்பில் முனியசாமி, காசி, சங்கரன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.