திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 2 பேர் கைது

திருநெல்வேலியில் 2 பேர், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.;

Update:2025-09-09 15:53 IST

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு, பத்தினிபாறை, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் நந்தா (வயது 19), மிக்கேல் மகன் சேர்மன்துரை(32) ஆகிய இருவரும் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

இதுகுறித்து மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைத்தளத்தில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சினையைத் தூண்டும் விதமாக வீடியோ வெளியிட்ட நந்தா, சேர்மன்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு‘ செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்