சிவகங்கை மடப்புரம் கோவில் ஊழியர் சத்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணிநேரம் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுபற்றி டி.ஜி.பி.யிடம் இ-மெயில் மூலம் மனு அளித்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தன்னைப்போன்று பிற சாட்சிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது என மனுவில் அவர் குறிப்பிட்டு உ ள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்ற 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப்புகளை மாநில அரசு வழங்கும். இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.235 கோடி செலவிடப்படும் என கூறினார்.
புதுச்சேரியில் கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கி பிரபல கால்பந்து வீரர் தியாகோ ஜோட்டா 28 வயதில் மரணம் அடைந்துள்ளார்.
ஜூலை 19ம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்
ஜூலை 21 - ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 19ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு - தமிழ்நாடு அரசு
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு என அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் சுப்மன் கில்
இங்கிலாந்து மண்ணில் அடுத்தடுத்து இரு டெஸ்டுகளில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் (முதலில் முகமது அசாருதீன்) கில் பெற்றார்.
இளைஞர் அஜித்குமார் மரணம் - முக்கிய சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை
திருப்புவனம் இளைஞர் அஜித் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் நீதிபதி தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.
இதன்படி சக்தீஸ்வரன், கார்த்திக் வேலு, பிரவீன் குமார் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த முடியாது: ஐகோர்ட்டு திட்டவட்டம்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என நீதிபதிகள் தெரிவித்ததுடன். நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.