இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025

Update:2025-07-13 09:50 IST
Live Updates - Page 3
2025-07-13 09:40 GMT

விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு - பரபரப்பு

சென்னையில் இருந்து இலங்கைக்கு 126 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்ட போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த விமானி கண்டுபிடித்தார். இயந்திரக் கோளாறை விமானி உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

2025-07-13 09:32 GMT

இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசிய நிலையில், இதுபற்றி மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் கூறியது முற்றிலும் சரி. நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றார்.

இதனை மனதில் வைத்தே, குற்றவியல் நீதி முறையை முற்றிலும் மாற்றம் செய்வதற்காக, பிரதமர் மோடியின் அரசு மற்றும் நம்முடைய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பாரதீய நியாய சன்ஹிதா, பாரதீய நாகரீக சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்சிய சன்ஹிதா என 3 புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த நடைமுறையில் விரைவான மற்றும் வெளிப்படையான தன்மையை கொண்டு வந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

2025-07-13 08:23 GMT

அதிமுக - பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும் - உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல பூத் முகவர்கள் பயிற்சி முகாமில் பேச்ய உதயநிதி, “பாஜக அரசு பாசிச மாடல் அரசு, அதிமுக அரசு அடிமை மாடல் அரசு, எடப்பாடி பழனிசாமி இப்போது காவி சாமி ஆகிவிட்டார்.

வருகின்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது. பூத் முகவர்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும். அடுத்த 8 மாதங்கள் பூத் முகவர்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன.

பல கட்சிகள் பூத் முகவர்களையே போடாத நிலையில் டிஜிட்டல் முகவர்களை திமுக அமைத்துள்ளது. 730 கோடி மகளிர் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி பயில மாதம் 1000 ரூபாய் - 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 20 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்” என்று கூறினார்.

2025-07-13 08:13 GMT

ஜூலை 16, 17ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு


நாளை மறுநாள் (ஜூலை 15-ம் தேதி) நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி ராணிப்பேட்டை, கோவை மாவட்டங்களில் ஜூலை 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

2025-07-13 08:08 GMT

சரக்கு ரெயிலில் பற்றிய தீ முழுவதும் அணைக்கப்பட்டது: ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் எரிந்து நாசம்


டீசல் டேங்கர் ரெயிலில் அதிகாலை 5.20 மணிக்கு பற்றிய தீ, 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. ரெயில் பெட்டிகள் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


2025-07-13 08:06 GMT

சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரெயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன.

உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். இது சாதாரண தீ விபத்து அல்ல: டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு. மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

2025-07-13 08:03 GMT

சரக்கு ரெயிலில் தீ விபத்து.. மேலும் 4 ரெயில்கள் ரத்து - வெளியான முக்கிய தகவல்


சரக்கு ரெயில் தீ விபத்து தொடர்பாக மேலும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2025-07-13 07:50 GMT

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: மு.க.ஸ்டாலின்


தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒவ்வொருவராக நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.


2025-07-13 07:49 GMT

முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு


நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


2025-07-13 07:47 GMT

நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செலவுகளை குறைக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அடுத்த கட்டமாக, நாசாவில் உயர் பொறுப்பில் இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்