இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

Update:2025-09-16 09:06 IST
Live Updates - Page 2
2025-09-16 11:14 GMT

பேரீட்சம்பழத்தில் கஞ்சா

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தனது மகனுக்கு பேரீட்சையில் மறைத்து வைத்து கஞ்சா எடுத்து வந்த தாய். பேரீட்சையில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்த தாய் மீது வழக்குப்பதிவு.

2025-09-16 10:55 GMT

சபரிமலை நடை திறப்பு

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. வரும் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

2025-09-16 08:20 GMT

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு; ரெய்னா, தவானை தொடர்ந்து 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்


ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 


2025-09-16 08:12 GMT

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்.16ம் தேதி ) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-09-16 08:10 GMT

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது - அண்ணாமலை

சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அக்டோபர் முதல் வாரம் முதல் நாள்தோறும் மூன்று இடங்களில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

2025-09-16 08:06 GMT

முன்பு பள்ளி ஆசிரியை...இப்போது திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை...யார் இவர் தெரியுமா?

மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை அடையாளம் தெரிகிறதா?. அவர் தமிழ், தெலுங்கு சினிமா உலகில் ஒரு முன்னணி கதாநாயகி. ஒரு காலத்தில் தொடர் வெற்றிப்படங்களால் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

2025-09-16 07:32 GMT

தவெக தலைவர் விஜய் பயணத்திட்டத்தில் மாற்றம்

தவெக தலைவர் விஜய் பரப்புரை திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 மாவட்டம் மட்டும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சியில் நடந்த விஜயின் முதல் பரப்புரையில் மக்கள் அதிகமாக திரண்டதால், அங்கு 2 இடங்களில் மட்டுமே பேச முடிந்தது. இதனால் தவெக இந்த மாற்றத்தை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2025-09-16 07:24 GMT

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் புதிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தை சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகம் பெற்றுள்ள பெருமை என்று எடப்பாடி பழனிசாமி அவரிடம் தெரிவித்தார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

2025-09-16 07:20 GMT

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வருகிற 21-ம் தேதி நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரை சந்தித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் விழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்