இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

Update:2025-09-16 09:06 IST
Live Updates - Page 3
2025-09-16 07:00 GMT

அவமானப்பட்டது இந்தியாதான்.. நாங்கள் அல்ல - பாக்.முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து


இந்த விவகாரத்தில் அவமானப்பட்டது இந்தியா தானே தவிர தாங்கள் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

2025-09-16 06:59 GMT

கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில் அனுமதி


கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு பேருந்தில் கூமாபட்டிக்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .


2025-09-16 06:43 GMT

அமித்ஷா இல்லம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய எடப்பாடி பழனிசாமி


டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்குவதற்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் சூட் ரூம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், அதனை தவிர்த்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இல்லம் அருகே உள்ள தாஜ் மான்சிங் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் மூத்த நிர்வாகிகள் உடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2025-09-16 06:40 GMT

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2025-09-16 06:33 GMT

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி....என்ன தெரியுமா ?


பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக, அவருக்கு 2022 ஆம் ஆண்டு உலககோப்பை வென்ற அர்ஜென்டினா ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.


2025-09-16 06:27 GMT

''லிங்கா'' நடிகையின் தெலுங்கு அறிமுக படம்...ரிலீஸ் எப்போது?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தபாங்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

2025-09-16 06:04 GMT

பிடித்த தனுஷ் படங்கள்...மனம் திறந்த சாய் அபயங்கர்

தனுஷ் நடித்துள்ள ''இட்லி கடை'' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர்களுடன் சில விருந்தினர்களும் கலந்துகொண்டனர். அதில், இசையமைபாளர் சாய் அபயங்கரும் ஒருவர்.

அப்போது மேடையில் சாய், தனக்கு பிடித்த தனுஷ் படங்களை கூறினார்.  

2025-09-16 06:04 GMT

ராமசாமி படையாச்சியாரின் 108-வது பிறந்த தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 108-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



2025-09-16 05:54 GMT

டேராடூனில் கொட்டித் தீர்த்த கனமழை - போக்குவரத்து கடும் பாதிப்பு

உத்ராகண்ட் மாநிலம் டேராடூனில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த பாலம் சேதம் அடைந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தற்போது அங்குள்ள வெள்ள பாதிப்புகளை அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்து வருகிறார்.

2025-09-16 05:49 GMT

 4 கூட்டணிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் - டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி


தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

அதிமுக தோற்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். 4 கூட்டணிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும். இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி தோற்க நாங்கள் காரணமில்லை.

தமிழக மக்கள் முட்டாள் அல்ல, அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக கூறுவது தவறு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்களே தவிர பாஜக அல்ல. சசிகலாவின் பேச்சைக் கேட்டுத்தான் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர் 122 எம்.எல்.ஏக்கள் சசிகலா சொன்னதால் தான் வாக்களித்தனர்.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்-அமைச்சரானார். ஆனால், தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார். ஈபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. துரோகத்தை தவிர ஈபிஎஸ்-க்கு வேறு எதுவும் தெரியாது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்