இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

Update:2025-06-01 09:38 IST
Live Updates - Page 2
2025-06-01 11:19 GMT

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-06-01 11:14 GMT

"தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.." எச்சரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொதுக்குழுவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது.

இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

2025-06-01 10:47 GMT

ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக விஜய் என்னுடன் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது எடப்பாடி பழனிசாமியிடம் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “அவரே மறுபடி டிவிட் செய்துவிட்டார். ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

2025-06-01 10:36 GMT

தி.மு.க. உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால்.. ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-.

கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

2025-06-01 10:23 GMT

தே.மு.தி.க. உடன் சுமூக உறவு உள்ளது - எடப்பாடி பழனிசாமி

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேமுதிக எங்களுடன் சுமூக உறவில் உள்ளது. எதையாவது சொல்லி பிரேக் பண்ண நினைக்காதீங்க.. அது ஒருபோதும் நடக்காது..” என்று கூறினார்.

2025-06-01 10:15 GMT

"பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் தான் அ.தி.மு.க. உள்ளது.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் பழனிசாமி. என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராகஅறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு! என்ன... காலில் மட்டும்தான் விழவில்லை! அது தனியாகசெய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை!

ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க! அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான்

இவ்வாறு அவர் கூறினார். 

2025-06-01 10:01 GMT

அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக தான் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை..

அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம். தமிழகத்தில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடக்கின்றன.

16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை.

தூர்வாராததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடினர். கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடும் அளவுக்கு அவல ஆட்சி நடைபெறுகிறது” என்று அவர் கூறினார். 

2025-06-01 09:53 GMT

“பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்..” : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் மமதையில்பேசுகிறவன் அல்ல. “கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை” என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல!  எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்! சொல்லைவிட செயலே பெரிது! வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல்இருக்கும் நம்பிக்கையில்தான். 

இவ்வாறு அவர் கூறினார். 

2025-06-01 09:21 GMT

அடுத்த ஆண்டு இதே நேரம் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம்! அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது!

ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும்பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில்என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்கவேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!”.இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கவேண்டும்! அதுக்கான வியூகத்தை வகுக்கும்பொதுக்குழுதான் இது!

இவ்வாறு அவர் கூறினார். 

2025-06-01 09:19 GMT

பள்ளிகள் நாளை திறப்பு: ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்காக உயர்வு


பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்