காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான்
மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மன்சூர் அலிகான் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
புதின் வருகையின்போது கையெழுத்தாகும் இந்தியா-ரஷியா அணுசக்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியா-ரஷியா மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.
"நட்சத்திரம் என்பதை கார் தீர்மானிக்குமா"?- துல்கர் சல்மான் பேட்டி
சொகுசு காரில் வந்தால் மட்டுமே பாலிவுட்டில் நட்சத்திரங்களாக அங்கீகரிப்பார்கள் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.13 ஆக சரிந்துள்ளது.
சென்னையில் இன்று இரவுடன் மழை ஓயும் - வானிலை ஆய்வாளர் தகவல்
வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று இரவுடன் மழை ஓய வாய்ப்பு உள்ளது. நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் ஈரப்பதம் மாநிலம் முழுவதும் பரவுவதால், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
கடந்த நான்கு நாட்களில் எண்ணூரில் 50 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர்.-ஆல் நேரிடும் அவலம்; வாக்காளர் செல்போன் எண்களை தவறாக பயன்படுத்தும் மர்ம நபர்கள்
பொதுமக்களுக்கு போன் செய்து, உங்களது கணக்கெடுப்பு படிவத்தில் சில தகவல்கள் வேண்டும் என்று சில மர்ம நபர்கள் கேட்கின்றனர்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம்
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி சார்பில் இன்று காலை மட்டும் 2,74,200 பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
விஜய்யின் ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி ரத்து
ரோடுஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 2 நாட்களில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடு செய்வதில் சிக்கல் உள்ளது
அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,060-க்கும், சவரன் ரூ.96,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறப்பித்துள்ளார். X