கோவை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
கல்லூரி மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து கோவையில் அ.தி.மு.க., த.வெ.க. இன்று ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி
ரெயில்வே சார்பில் டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உதவியாளர் துணையுடன் செல்போன் யு.டி.எஸ். (எம்-யு.டி.எஸ்.) சாதனத்தை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வகையில், முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஏற்றுமதி. இறக்குமதி தொழில் செய்துவரும் தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனைநடத்தி வருகின்றனர்.
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் கும்பல் சுட்டுப்பிடிப்பு.. என்ன நடந்தது?
காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
ராசிபலன் (04.11.2025): இந்த ராசிக்காரர்கள் இன்று நினைத்த காரியத்தை முடித்து மகிழ்ச்சியடைவீர்கள்
கடகம்
கணவர் தங்கள் சொல்லுக்கு மதிப்பளிப்பார். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் உடல் நலம் தேறும். வீட்டுச் செலவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். ஆனாலும், தங்கள் தொழிலில் நல்லதொரு பணத்தொகை வந்து சேரும். பணப்பற்றாக்குறை விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்