13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.4) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 77.52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பீகார் மாநிலத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக புகார்கள் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாசிம் அக்ரம் சாதனையை சமன் செய்த ஸ்டார்க்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு: டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடுவோரின் பணிச்சுமையை குறைக்க ஆணை
BLO அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்குமாறு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பணி நேரத்தை குறைக்கும் வகையில், கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்
ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர்தான் - நடிகர் ரஜினிகாந்த்
ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஏவிஎம் சரவணன் மறைவுக்கு பவன் கல்யாண் இரங்கல்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர்
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.