பீகார் தேர்தல் - வேட்பாளர் பட்டியலை அறிவித்தது ஆம்ஆத்மி
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக முதற்கட்டமாக 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி.
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; அக்.17ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் விசாரிப்பு
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு அக்டோபர் 17ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது .மதுரை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்த மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்: மருத்துவர்கள்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2025ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேரி ப்ரன்கோ, பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சிக்கு இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பிரதமர் திடீர் ராஜினாமா
பதவியேற்ற ஒருமாதத்தில் பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஓராண்டிற்குள் 4வது பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெகுர்னு ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் துர்கா பூஜை ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதனால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பிர்ச்சினை கல் எறிதலில் தொடங்கி வன்முறையாக வெடித்தது. பொது சொத்துக்கள் சேதமடைந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு 23 வாகனங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடி செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து 3 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்களின் பயன்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக ரூ.5.78 கோடி செலவில் 25 அவசர கால ஊர்திகள், ரூ.4 கோடி செலவில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் மகளிர் கிரிக்கெட் அணி வலிமையான ஆதிக்கத்தை காட்டியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். தேசம் நமது அணியை நினைத்து பெருமை கொள்கிறது எனவும் அமித்ஷா கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய நிலையில் அமித்ஷா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தவெக மாவட்ட செயலாளர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை நேற்று தொடங்கியது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர்.
இந்த நிலையில், விஜய் பிரசார கூட்ட நெரிசல் வழக்கில் கைதான தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் புவுன்ராஜை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. மேலும் வேலுசாமிபுரத்தில் 2-வது நாளாக ஆய்வு செய்ய அஸ்ரா கர்க் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. வேலுசாமிபுரத்தில் அளவீடுகளை மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.