இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026

Update:2026-01-07 09:09 IST
Live Updates - Page 5
2026-01-07 04:38 GMT

முதல் டி20 ; இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல் 


டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

2026-01-07 04:37 GMT

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..இன்றைய நிலவரம் என்ன? 


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2026-01-07 04:33 GMT

பரபரக்கும் அரசியல் களம்.. எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி.. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க..! 


சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சந்தித்தார்.

2026-01-07 03:50 GMT

மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் - டிரம்ப் 


நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும் என டிரம்ப் கூறியுள்ளார்.

2026-01-07 03:47 GMT

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை 


அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-01-07 03:46 GMT

ஜெர்மனி அதிபர் 2 நாள் பயணமாக இந்தியா வருகை 


இந்தியாவுக்கான தனது முதல் பயணத்தின் போது, ​​மெர்ஸ் அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார்.

2026-01-07 03:44 GMT

3 மாசம் தான்னு சொன்னாங்க...புற்றுநோயை வென்று வந்தது பற்றி யுவராஜ் சிங் உருக்கம்


3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.

2026-01-07 03:43 GMT

இன்று வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை..! 


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-01-07 03:42 GMT

'சூர்யா பாடலில் விஜய்..'.. இயக்குனர் விக்ரமன் வெளியிட்ட உருக்கமான பதிவு 


`உன்னை நினைத்து' படத்தில் விஜய் நடித்த காட்சிகளை இயக்குனர் விக்ரமன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

2026-01-07 03:41 GMT

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் விவகாரம்: ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை 


‘ஜனநாயகன்’ படத்துக்கு எதிரான புகாரை தாக்கல் செய்ய வேண்டும் என தணிக்கை வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்