பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ஜ.க தேர்தல் மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வந்தனர்.
குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- ஏ (தலைமை செயலக பணி )உதவிப் பிரிவு அலுவலர் /உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 5-ம் தேதி
எழுத்துத் தேர்வு: 21-12-2025
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 32
வரிகளை வைத்தே அமைதியை ஏற்படுத்துகிறோம்: டொனால்டு டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த வார விசேஷங்கள்: 7-10-2025 முதல் 13-10-2025 வரை
இந்த வார விசேஷங்கள்
7-ந் தேதி (செவ்வாய்)
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
கேரள ஓணம் லாட்டரி: பெயிண்ட் கடை தொழிலாளிக்கு ரூ.25 கோடி அடித்த யோகம்
ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்கு ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்திருக்கிறது.
கவின் ஆணவக்கொலை வழக்கில் ஜாமீன் கோரி எஸ்.ஐ. மீண்டும் மனு
காதல் விவகாரத்தில் பொறியாளர் கவினை ஆணவப் படுகொலை செய்த வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தையும், எஸ்.ஐ.யுமான சரவணன் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாக்டர் ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த செங்கோட்டையன்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாசை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.