தென்தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம்: அது தீபத் தூணே இல்லை - அரசு தரப்பு வாதம்
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் இன்று அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஐகோர்ட்டு மதுரை கிளையில் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை, முதலில் தீபத் தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை, எனவே அது தீபத் தூணே இல்லை.
நில அளவைத் துறை, வருவாய் துறை ஆய்வு செய்ததில் இது போன்றே பல்வேறு தூண்கள் தமிழ்நாட்டில் உள்ளன. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, எவ்வித ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
விஜய்யின் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்
பிரசார கூட்டத்தை முடித்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் பாதுகாவலர்கள் விரைந்து வந்து கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
காவல்துறை அனுமதித்த நேரத்தில் `சரியாக’ மக்கள் சந்திப்பை நடத்தி முடித்த விஜய்
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. இதனைத்தொடர்ந்து மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் , ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு, செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில் காவல்துறை அனுமதித்த நேரத்தில் `சரியாக’ மக்கள் சந்திப்பை விஜய் நடத்தி முடித்தார். முன்னதாக காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை
BS3 மற்றும் BS4 வாகனங்கள் இன்று முதல் தலைநகர் டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், காற்று மாசை கட்டுப்படுத்த BS6 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் டெல்லி அரசு தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான VB-G RAMG மசோதா கடும் அமளிக்கு இடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.
விஜய்க்கு செங்கோல் வழங்கிய செங்கோட்டையன்
ஈரோடு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய்க்கு, செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.
திமுக ஒரு தீயசக்தி - தவெக தலைவர் விஜய் ஆவேசம்
திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூய சக்தி. தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையே தான் போட்டியே. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்திமிக்க நம்மால் தான் முடியும். செங்கோட்டையன் அண்ணன் போல் இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள். தவெகவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் - விஜய்
சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று திமுக அரசு செயல்படுகிறது. எங்களுக்கு தவெகவை கண்டு பயமில்லை பயமில்லை என்று சொல்லிக் கொண்டே கதறுகிறார்கள். மாறுவேடத்தில் மரு வைத்துக் கொண்டு வருபவர்கள், மண்டை மீது இருக்கும் கொண்டையை மறைக்க வேண்டும். விஜய்யை, தவெகவை எப்படி முடக்கலாம் என்றே 24 மணிநேரமும் அரசு சிந்தித்து வருகிறது.