கரூர் கூட்ட நெரிசல்.... விஜய் சேதுபதி பட தலைப்பு மற்றும் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு
இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் இன்று மாலை 4.02 மணிக்கு வெளியாக இருந்தது.
இதுவரை 30 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - கரூர் அரசு மருத்துவமனை
இதுவரை 30 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கரூர் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழப்பு - திமுகவின் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (28-09-2025) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை - 17 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீதும் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தேர்வு செய்துள்ளார். அவரது அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளார். அத்துடன் அவர் சஞ்சு சாம்சனை 5-வது பேட்டிங் வரிசையிலேயே தேர்வு செய்துள்ளார்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் எத்தனை ரன் அடிப்பார்..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
சமீப காலமாக இந்திய டி20 கேப்டனான சூர்யகுமார் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அவரது தலைமையில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும்போதிலும், ஒரு பேட்ஸ்மேனாக அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இந்த சூழலில் எதிர்வரும் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் அசத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் எத்தனை ரன்கள் அடிப்பார்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
டி20 கிரிக்கெட்: இன்னும் 11 ரன்கள்தான்.. விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்க்க உள்ள அபிஷேக் சர்மா
மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
''ரொம்ப அழுதேன்...என்னுடன் நின்றது அவர்தான்'' - தமன்
மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் பற்றிப் பேசும்போது தமன் வருத்தம் தெரிவித்தார்.