அடுத்து தவெகவில் இணையப்போகும் அதிமுக தலைவர்கள் யார்..? - செங்கோட்டையன் பதில்

மக்கள் ஆதரவுடன் 2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,;

Update:2025-11-28 10:42 IST

சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:-

மக்களின் ஆதரவுடன் 2026ல் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வார். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ விஜய்க்கு உதவுவேன். அதிமுகவில் இருந்து மேலும் சிலர் வருவது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. சொன்னால் பிரச்சினை வரும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்