தன்யா பாலகிருஷ்ணாவின் புதிய படம்...டிரெய்லர் வெளியீடு
இப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை பாயும் - எச்சரித்த நடிகை
தனது விவாகரத்து குறித்து தொடர்ந்து பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை மஹி விஜ் பதிலளித்துள்ளார்.
’கெரியரில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்த படம் அது’ - தமன்னா
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தமன்னா பாகுபலி படம் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
15 மண்டலங்களில் 116 இடங்களில் இன்று மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் 17.10.2025 முதல் 28.10.2025 வரை 624 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36,353 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று (29.10.2025) 15 மண்டலங்களில் உள்ள 116 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
ரபேல் போர் விமானத்தில் பயணிப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று காலையில் வருகை தந்தார். அவருக்கு விமானப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணித்தார்.
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் - சென்னை மாநகராட்சி தகவல்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 17-ந்தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக 36,353 மருத்துவப் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இந்த வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதையும், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ஆடும் லெவன் அணியில் மாற்றம் செய்யப்போவதில்லை: சூர்யகுமார் யாதவ்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 210-க்கும். ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆகி வருகிறது.