இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

Update:2025-11-30 09:23 IST
Live Updates - Page 3
2025-11-30 06:33 GMT

கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது 


சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன என்ஜினீயரின் கார் நேற்று அதிகாலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.

2025-11-30 06:31 GMT

சென்னைக்கு தெற்கே 180 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல்.. நகரும் வேகம் அதிகரிப்பு 


தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. 

2025-11-30 05:28 GMT

மேட்டூர் அணை: சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் காயம்


சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர்

மேட்டூர் அணையின் வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்ட சாலையில் இருந்து விலகி பஸ் கவிழ்ந்தது. அய்யப்ப பக்தர்கள் 47 பேர் பஸ்சில் பயணித்த நிலையில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-11-30 05:21 GMT

தமிழ்நாடு கவர்னர் இல்லத்தின் பெயர் "மக்கள் பவன்" என மாற்றம்


ராஜ் பவன் என இருந்த பெயர் லோக் பவன் (மக்கள் பவன்) என மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேசங்களில் லோக் நிவாஸ் என கவர்னர் மாளிகை அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகைகளின் பெயர்களை மாற்ற 2024 கவர்னர் மாநாட்டில் தமிழ்நாட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்திருந்தார்.

2025-11-30 05:16 GMT

தென்காசி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பைக் மீது காய்கறி ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

சுரண்டை நகராட்சி கவுன்சிலர் உஷா பிரபு, பிளஸ்ஸி மற்றும் அருள் செல்வம் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-11-30 05:07 GMT

டிட்வா புயலால் மூவர் உயிரிழப்பு - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்


டிட்வா புயலால் தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாவும், 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2025-11-30 04:54 GMT

முத்தரப்பு டி20: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் ‘சாம்பியன்’ 


6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2025-11-30 04:53 GMT

உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா-சவுதி அரேபியா சென்னையில் இன்று மோதல் 


உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.


2025-11-30 04:50 GMT

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் 


 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

2025-11-30 04:27 GMT

தஞ்சை: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி; 3 பேர் காயம் 


தஞ்சை கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண்ணின் தந்தை, தாய், சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்