அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பால், தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தண்டவாளத்தில் கல் - 15 வயது சிறுவன் கைது
கோவை, ஆவாரம்பாளையம் அருகே கடந்த 25ம் தேதி ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ரெயில்வே போலீசார் சேர்த்தனர்.
இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு
2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
முன்னாள் ரேஸருடன் புகைப்படம் எடுத்த அஜித்குமார்
இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் பார்முலா 1 டிரைவர் ரிக்கார்டோ பாட்ரீஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகரும், ரேஸருமான அஜித்குமார்.
சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று கரைக்கும் பணி தொடங்கி உள்ளது.
தமிழகத்தின் பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் நியமனம்
காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக தற்போது பணியாற்றிவரும் வெங்கடராமனுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ''சிவா மனசுல சக்தி'' கூட்டணி
16 ஆண்டுகளுக்குப் பிறகு 'சிவா மனசுல சக்தி' கூட்டணி மீண்டும் இணைகிறது. எம். ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டிலேயே கலந்தாய்வு மூலம் சேர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை.. மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் முக்கிய முடிவு
இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப்பிறகு பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கொரோனா பெருந்தொற்று, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.