யாரோ எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: மா.சுப்பிரமணியன் விமர்சனம்
விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்;
சென்னை,
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார் . பிரசாரத்தில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லை என தெரிவித்தார் .
இந்த நிலையில், விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
தவெக தலைவர் விஜயின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது.நாகை மருத்துவமனைக்கு சென்று விஜயை பார்க்கச் சொல்லுங்கள். என தெரிவித்தார்.