திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் - ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை,
வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பொது செயலாளர் பதவிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும். ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராவது உறுதி. விரக்தியின் எல்லையில் இருப்பதால் அதிமுக பொதுக்குழு நடக்காது என்கிறார் வைத்திலிங்கம்.
அதிமுக பற்றி குறை கூற தகுதியில்லாத டிடிவி தொடர்ந்து விமர்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலில் தான் இருப்பதை காண்பிக்கவே கருத்து தெரிவித்து வருகிறார் சசிகலா என்றார்.