சத்தீஷ்காரில் 2-ம் கட்ட தேர்தல்


சத்தீஷ்காரில் 2-ம் கட்ட தேர்தல்
x
Daily Thanthi 2023-11-17 01:08:22.0
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் 22 மாவட்டங்களில் பரவியுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை  5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அதேநேரம் நக்சலைட்டு தாக்கம் நிறைந்த ராஜிம் மாவட்டத்தின் பிந்த்ரனாவாகர் தொகுதியின் 9 வாக்குச்சாவடிகளில் மட்டும் காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 130 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர். இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்கள் 1.63 கோடி ஆகும். இதில் 81.41 லட்சம் ஆண்கள் மற்றும் 81.72 லட்சம் பெண்களும் அடங்குவர். இவர்கள் வாக்களிப்பதற்காக 18,833 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டு உள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

1 More update

Next Story