அரியானா சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி... ... அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
x
Daily Thanthi 2024-10-05 05:12:28.0
t-max-icont-min-icon

அரியானா சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மல்யுத்த வீராங்னையும், பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனது வாக்கினை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக, அனைவரும் வெளியே வந்து அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டின் குடிமகனாக இது உங்களின் மிகப்பெரிய பொறுப்பு. எந்த கட்சியில் இணைய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. வினேஷ் போகத்தின் முடிவை நான் மதிக்கிறேன்"என்றார்.

1 More update

Next Story