
பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது - இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் தனது எக்ஸ் வலைதளத்தில், “நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரசின் காசா கான்ட் மீது பல எதிரி ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் பறந்து செல்வது காணப்பட்டது. சட்ட விரோதமான ஆளில்லா விமானங்கள் உடனடியாக நமது வான் பாதுகாப்புப் பிரிவுகளால் ஈடுபடுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய ராணுவம் எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.






