அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு  90... ... அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-10-05 12:49:20.0
t-max-icont-min-icon

அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story