
வித்தியாசமான குடிநீர் வசதி
மாநாட்டு திடலில், இரவை பகலாக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாலமான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, இருசக்கர வாகனங்களில் வர வேண்டாம் என்றும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் வரவேண்டாம் எனவும் கட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்பாட்டு பணிகளை ஏராளமான மக்கள் நேற்றே பார்வையிட வந்தனர். இரவு முழுவதும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
மற்ற கட்சிகளிடம் இருந்து வித்தியாசத்தை காண்பிக்கும் வகையில் த.வெ.க. மாநாட்டில் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக, தொண்டர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், ‘ஆரே வாட்டர் பிளாண்ட்’ மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக நிலத்திற்கு அடியில் சுமார் 8 ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு பைப்புகள் பதிக்கப்பட்டு உள்ளன. நிறைய குடிநீர் நல்லிகள் அவற்றில் பொருத்தி இருப்பதால், எந்த இடத்தில் இருந்தும் குடிதண்ணீர் பெறும் வகையில் வசதி உள்ளது.






