திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: நடிகர் ரோஷன் உல்லாஸ் கைது


திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: நடிகர் ரோஷன் உல்லாஸ் கைது
x

நடிகர் ரோஷன் உல்லாஸுக்கும், திருச்சூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

மலையாள பிரபல நடிகர் ரோஷன் உல்லாஸ் (வயது 32). இவர் ஓட்டம் என்ற படத்தில் நடித்து உள்ளார். சின்னத்திரையில் நடித்து வருகிறார். அவருக்கும், திருச்சூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரோஷன் உல்லாஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வந்து உள்ளார். இதுகுறித்து இளம்பெண், எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி திருச்சூர், கோவையில் வைத்து நடிகர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ரோஷன் உல்லாஸை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story