கோவை மருதமலை முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்


கோவை மருதமலை முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்
x
தினத்தந்தி 21 Feb 2025 5:08 PM IST (Updated: 1 April 2025 8:15 AM IST)
t-max-icont-min-icon

பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தான் நடிக்க இருக்கும் புதிய படங்களின் கதை கோப்புகளை மருதமலை திருக்கோயிலில் வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.

கோவை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் போட், தி கோட், டீன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கோவையின் ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதில் மாதவன் கதாநாயகனாகவும் , யோகி பாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார் . இதற்கான படப்பிடிப்பு இன்று முதல் இரண்டு நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.


இந்நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த யோகி பாபு மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். விசேஷ பூஜையான அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டார். இதையடுத்து தான் கொண்டு வந்து புதிய படப்பிடிப்பின் கதை கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி பெற்றுக் கொண்டார்.

1 More update

Next Story