சென்னை வந்த அல்லு அர்ஜுன் - விரைவில் வருமா அட்லீ பட அறிவிப்பு ?


Allu Arjun-Atlee film announcement expected soon as Pushpa actor arrives in Chennai
x
தினத்தந்தி 5 April 2025 7:24 AM IST (Updated: 5 April 2025 12:07 PM IST)
t-max-icont-min-icon

அட்லீயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நேற்று அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.

சென்னை,

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைய இருக்கிறார். அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்க உள்ள இப்படத்தின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் அட்லீயை சந்தித்து இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேற்று அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story