ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் 'அண்ணாமலை' படம்


ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் அண்ணாமலை படம்
x

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'அண்ணாமலை' திரைப்படம் ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'அண்ணாமலை' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் குஷ்பு, மனோரமா, ஜனகராஜ், ராதாரவி, சரத்பாபு எனப் பலரும் நடித்துள்ளனர். பாலிவுட்டில் வெளிவந்த "குத்கார்ஸ்" படம்தான் இயக்குனர் பாலச்சந்தர் தயாரிப்பில் தமிழில் அண்ணாமலையாக ரீமேக் ஆனது.

இந்த நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை படத்தை 4கே தரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகின்ற டிசம்பர் 12 ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

1 More update

Next Story